பி.வி.சிந்துவிடம் வருத்தம் தெரிவித்த ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு: எதற்கு தெரியுமா!

Update: 2022-07-06 09:54 GMT

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் நாட்டை சேர்ந்த அகானே யமாகுச்சியிடம் தோல்வியுற்றார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து இரண்டாவது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அப்புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் செய்வதற்கு சிந்து அதிகமான நேரம் எடுத்துக்கொண்டார் என்று நடுவர் இந்த நடவடிக்கையை எடுத்தார் என கூறப்படுகிறது.

அப்போது சிந்துவின் விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்துவிட்டார். நடுவரின் முடிவை எதிர்த்து தலைமை நடுவரிடம் அப்பீல் செய்தும் எவ்வித பலனும் இல்லை. இதனால் விரக்தியில் விளையாடிய சிந்து அப்போட்டியில் தோல்வியை தழுவினார். மேலும், தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை பற்றி சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ஆசிய போட்டியில் நடுவரின் தவறான முடிவுக்கு ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் சிக் ஷின் சென், சிந்துவிடம் வருத்தம் கூறியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News