வரலாற்று வெற்றி பெற்று அசத்திய இந்திய அணிக்கு 5 போனஸ் அறிவித்து பி.சி.சி.ஐ!
வரலாற்று வெற்றி பெற்று அசத்திய இந்திய அணிக்கு 5 போனஸ் அறிவித்து பி.சி.சி.ஐ!
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை தழுவியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் சதத்தால் அசத்தல் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய நான்காவது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டிய கட்டயத்தில் இந்திய அணி இருந்தது.
இந்நிலையில்இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 369 ரன்கள் அடித்த நிலையில் பின்னர் விளையாடிய இந்திய அணி 336 ரன்கள் அடித்தது.
முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் மற்றும் வார்னின் ஆட்டத்தால் 294 ரன்கள் அடித்தது. இந்திய அணிக்கு 327 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா அணி. இந்திய அணியில் ரோஹித் சர்மா 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்ற பின்னர் சுக்மன் கில் மற்றும் பஜாரா இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்பியது.
அதிரடியாக விளையாடிய கில் 91 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த ரஹானே 24 ரன்னில் அவுட் ஆக புஜாரா 56 ரன்கள் அடித்து நிலைத்து விளையாடி வந்த நிலையில் அவரும் அவுட் ஆக இந்திய அணி தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து விளையாட இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது.
ரிஷப் பண்டின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெல்ல இந்திய அணிக்கு பிசிசிஐ 5 கோடி போனஸ் வழங்கியுள்ளது.!