IPL 2023 அட்டவணையை முடிவு செய்த BCCI: இருந்தும் தொடரும் புதிய சிக்கல்?

ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணையை முடிந்த பிறகும், போட்டிக்கு முன்னும் பின்னும் பெரிய தொடர் நடைபெறுவதால் புதிய சிக்கல்.

Update: 2022-12-08 02:54 GMT

ஐ.பி.எல் 2023 ஆம் ஆண்டிற்கான அட்டவணையை BCCI இறுதி செய்து இருக்கிறது. இருந்தாலும் ஐ.பி.ல் போட்டிக்கு முன்பும் பின்பும் பெரிய தொடர் ஒன்று நடைபெற இருப்பதால் புதிய சிக்கல் தற்போது உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக முதல்முறையாக பழைய வடிவத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுகிறது. அதாவது சொந்த மண்ணில் ஏழு போட்டி மற்றும் வெளியூரில் 7 போட்டிகள் என ஒவ்வொரு அணியும் விளையாட உள்ளது.


இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த மண்ணில் விளையாட உள்ளது. எனவே ஐ.பி.எல் போட்டியை மார்ச் 31ம் தேதி அல்லது ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்க பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்துள்ளது. சுமார் இரண்டு மாதம் இன்று தொடர் நடைபெற உள்ளது. மேலும் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி எட்டாம் தேதி அல்லது ஜூன் 4-ம் தேதி முடிக்க BCCI முடிவு எடுத்துள்ளது.


குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று தான் இம்முறை அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் முதல் போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் இந்த தொடர் முடிந்த இரண்டு நாட்களில் ஐ.பி.எல் தொடங்கும் வகையில் அட்டவணை உள்ளதால் பிசிசிஐ சற்று குழப்பத்தில் இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News