கேப்டனின் அறிவுரையை கேட்ட BCCI: கடைசி ஒரு நாள் போட்டியில் முக்கிய வீரர் சேர்ப்பு!
இந்திய கேப்டன் ருக்சர்மா அவர்களின் அறிவுறுத்தின்படி BCCI கடைசி ஒரு நாளில் புதிய வீரரை சேர்த்து இருக்கிறது.
வங்காளத்திற்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணி வங்காளத்திற்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் தற்பொழுது ஒயிட்பாஷை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. என் நிலையில் தவறான அணி தேர்வுதான் இந்திய அணியின் தோல்விக்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தது என்றும் ஏற்கனவே இந்த கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்.
அக்சர் பட்டேல் முழு உடல் தகுதி எட்டாத நிலையில் அணியில் தேர்வு செய்யப்பட்டதால், முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஒருநாள் தொடர் தொடங்கும் முன்பு ரிஷப் அணியிலிருந்து விடுவிக்கப் பட்டதால் கடைசி நேரத்தில் ராகுல் விக்கெட் கீப்பர் ஆனார். இதே போன்று குல்தீப் சென் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக தொடர்ச்சியாக முழு உடல் தகுதி இல்லாமல் வீரர்களை இந்திய அணி தேர்வு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வங்காளப் பிரதேசம் போன்ற சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் விளையாட ஒரு தனித்துவம் சுழற்பந்து வீச்சாளர் கூட இந்திய அணியில் இல்லை. இதனால் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர் என்று தவறான யுத்தியில் களம் இறங்கி இருக்கிறது, இதன் காரணமாக கூட தோல்வி சந்தித்து இருக்கலாம்.
Input & Image courtesy: News