இந்திய அணியின் முக்கிய பயிற்சியாளர் அதிரடி நீக்கம்: அடுத்த வீரர்கள் இவர்கள்தான்?

T20 உலக கோப்பை தொடரில் வெற்றி வாய்ப்பை தழுவ விட்டதன் காரணமாக இந்திய அணியின் முக்கிய பயிற்சியாளர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Update: 2022-11-27 06:05 GMT

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முதற்கட்டமாக முக்கிய பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரை இறுதியில் மோசமான தோல்வியுடன் இந்தியா வெளியேறியது. இந்த தோல்வியினால் விரக்தி அடைந்த இந்திய ரசிகர்கள் காரணமாக, அனைவரையும் நீக்கி புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.


இதன் ஒரு பகுதியாக BCCIயும் நடவடிக்கை எடுத்தது. ஷர்ட் டென் சர்மா தலைமையிலான புதிய தேர்வு குழுவை ஒட்டுமொத்தமாக நீக்கி அதிரடி காட்டுகிறது. மேலும் புதிதாக தேர்வு குழுவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்று அறிவித்து வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல ஹர்திக் டி20 கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பயிற்சியாளர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


இந்திய அணியின் வீரர்களின் மனநல மேம்பாட்டு பயிற்சியாளராக பேடி அப்டன் இனி தொடர மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அப்டனின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் நிறைவுக்கு வந்தது. அவரின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா? என்ற ஆலோசனை நடந்த போது அவர் தேவை இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்து வந்த விராட் கோலி அப்டனின் பயிற்சியினால் தான் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஓபனிங் வீரர் ராகுல் தற்பொழுது அவரிடம் தான் தயாராகி வந்தார். ஆனால் இனி அவர்களின் உதவி இந்தியாவிற்கு தேவை இருக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News