அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.. ட்விட்டரில் பகிர்ந்த கோலி.!
அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.. ட்விட்டரில் பகிர்ந்த கோலி.!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: எங்களுக்குப் பெண் குழந்தை இன்று மதியம் பிறந்தது. இதனை உங்களிடம் தெரிவிப்பதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமுடன் உள்ளார்கள். எங்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று ட்விட்டரில் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.