ஒரு நாள் போட்டியில் ஓய்வு: பென் ஸ்டோக்ஸ் அதிரடி!

Update: 2022-07-19 02:38 GMT
ஒரு நாள் போட்டியில் ஓய்வு: பென் ஸ்டோக்ஸ் அதிரடி!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

அதாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், இவர் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். மேலும், கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலககோப்பையை வெல்வதற்கு பென் ஸ்டோக்ஸ் மிக முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளார். அதாவது நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News