பிக் பேஸ் 10 வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.!

பிக் பேஸ் 10 வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.!

Update: 2020-12-11 11:56 GMT

ஆஸ்திரேலியாவில் பிக் பேஸ் டி-20 கிரிக்கெட் நேற்று பிரமாண்டமாக தொடங்கி உள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போன்றே ஆஸ்திரேலியாவில் 10 வது சீசனில் அடியெடித்து வைத்துள்ளது பிக் பேஸ் லீக் தொடர். பிக் பேஸ் லீக் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் தொடரில் முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹர்பர்ட் ஹரிகன்ஸ் அணிகள் மோதின. 

இந்ந போட்டியில் முதலில் விளையாடிய ஹர்பர்ட் ஹரிகன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் வில் ஷக் மற்றும் டி சார்ட் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேற பின்னர் வந்த இங்ராம் நிலைத்து விளையாடி 55 ரன்கள் அடிக்க டிம் டிவிஸ் 58 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஹர்பர்ட் ஹரிகன்ஸ் அணி 178-8 ரன்கள் சேர்த்தது. டெனியல் கிரிஸ்டியன் மற்றும் தானிக்ஸ் தலா 3 விக்கெட்களை வீழத்தினர். 

பின்னர் விளையாடிய சிட்னி சிக்ஸர் அணியில் தொடக்க பிளிப்ஸ் 1 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த ஜக் எட்வர்ட் மற்றும் வின்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த சிட்னி ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் வின்ஸ் 67 ரன்னிலும் ஜக் எட்வர்ட் 47 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க சிட்னி அணி தடுமாறியது. மற்ற வீரர்கள் சொதப்ப ஹர்பர்ட் ஹரிகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Similar News