#BlackLivesMatter இயக்கத்துக்கு முதல் இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா ஆதரவு.!

#BlackLivesMatter இயக்கத்துக்கு முதல் இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா ஆதரவு.!

Update: 2020-10-26 18:58 GMT

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஐ.பி.எல் தொடரில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய வெளிப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.






அமெரிக்க காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற இருப்பினும் தவர் இறந்ததை அடுத்து காவல்துறையினரின் மிருகத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களில் இவ்வாறு முழங்காலிட்டு கையை உயர்த்துவது கருப்பினத்தவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சைகையாக இருந்து வருகிறது.

முன்னதாக 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்திற்கு ஆதரவாக எந்த ஒரு ஐ.பி.எல் அணியும் தங்களது ஆதரவை தெரிவிக்கவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹோல்டர் தெரிவித்து இருந்தார். ஒரு விருது விழாவில் பேசிய ஹோல்டர் "மேற்கிந்தியத் தீவுகள்‌ கிரிக்கெட் வாரியம் இது பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அணியுடனான தொடரில் பெண்கள் அணியினர் Black Lives Matter லோகோவை அணிந்து விளையாடி இந்த இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்" என்று கூறினார். ஐ‌.பி.எல் தொடர்‌ பற்றிக் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இங்கு ஒரு‌ முறை கூட அதைப் பற்றிய பேச்சே வரவில்லை. சில சமயம் இந்த இயக்கம் இருந் இடம் தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்படுகிறது." என்று அவர் கூறி இருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News