ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவரவிட்ட பாப் டுப் ப்ளஸிஸ்!

ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவரவிட்ட பாப் டுப் ப்ளஸிஸ்!

Update: 2020-12-29 08:27 GMT

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  தனஜேயா, சண்டிமல் மற்றும் சனகா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 396 ரன்கள் சேர்த்தது. இதை தொடர்ந்து விளையாடிய தென ஆப்ரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் எல்கர் மற்றும் மார்க்ரம் இருவரின் அதிரடி தொடக்கத்தால் தொடக்கத்திலிருந்தே ரன்குவிப்பில் ஈடுபட்டது. 

எல்கர் 95 ரன்களும் மார்க்ரம் 68 ரன்களும் அடித்து அவுட் ஆக பின்னர் பாப் டுப் ப்ளஸிஸ் மற்றும் பவுமா ஜோடி இலங்கை அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தது. 


பாப் டுப் ப்ளஸிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் பவுமா 71 ரன்கள் குவித்து அவுட் ஆக பின்னர் வந்த முல்டர் சிறிது நேரம் நிலைத்து விளையாட பாப் டுப் ப்ளஸிஸ் தொடர்ந்து இலங்கை அணியின் பந்துகளை வீளாச இரட்டை சதத்தை நோக்கி சென்றார் பின்னர் வந்த மாஹாராஜ் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாச தென் ஆப்ரிக்கா அணி இலங்கை அணிக்கு முதல் இன்னிங்ஸிலேயே பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என தெரிந்தது. ப்ளஸிஸ் 199 ரன்னில் அவுட் ஆக தென் ஆப்ரிக்கா அணி 621 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 65-2 என்ற நிலையில் இருந்தது.

Similar News