வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் - ஜெய்ஷா அதிரடி அறிவிப்பு
வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடிக்கும் வீரர்கள் நான்கு பிரிவாகவும், வீராங்கனைகள் மூன்று பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ஆண்டு ஒப்பந்த தொகை வழங்கப்படுகிறது. செயல்பாட்டிற்கு ஏற்ப வீரர்களுக்கு ஏழு கோடி, ஐந்து கோடி, மூன்று கோடி மற்றும் ஒரு கோடி என்றும், வீராங்கனைகளுக்கு 50 லட்சம், 30 லட்சம், 10 லட்சம் என்று ஒப்பந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் அளிக்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணம் என்ற பெயரில் தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது. வீரர்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது.
ICC கமிட்டி கூட்டத்தில் முடிவு:
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தை சமமாக வழங்க முடிவு எடுத்து இருக்கிறது. இந்த கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இந்திய கிரிக்கெட் வீரர்களை போல் வீராங்கனைகளுக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஒரு ஒரே ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சமும், ஒரு 20 ஓவர் போட்டிக்கு 3 லட்சம் முன் போட்டி கட்டணமாக பெறுவார்கள். முன்பு இந்திய வீராங்கனைகளுக்கும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் ஒரு லட்சம், டெஸ்ட் போட்டிக்கு 2 1/2 லட்சம் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர்:
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கூறுகையில், "பாலின பாகுபாட்டை கலைவதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதல் கட்ட நடவடிக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இணையாக ஊதியத்தை வழங்க திட்டம் அமல்படுத்திருக்கிறோம். இனிமேல் கிரிக்கெட் வீரர் வீரர்களுக்கான சமமான ஊதியம் வழங்கப்படும்" என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar