பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது !
முந்தைய ஒலிம்பிக் போட்டிகளை போல் இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளும் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர் பாக்கலாம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சியாக வருகின்றன.
மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.
19 வயதே ஆன அவனி லெகாரா பாராலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகளில் இதுவரை யாரும் தொட முடியாத புள்ளிகளான 249.6 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. முந்தைய ஒலிம்பிக் போட்டிகளை போல் இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளும் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர் பாக்கலாம்.
Image : மின்ட்