4-வது டெஸ்ட் போட்டி : இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார் !

Sports News.;

facebooktwitter-grey
Update: 2021-09-02 01:59 GMT
4-வது டெஸ்ட் போட்டி : இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார் !

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் அந்நாட்டு அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகள் முடிந்துள்ளன. தொடர் 1-1 என்ற கணகில் சமனில் உள்ளது.

இந்த நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Maalaimalar 

Image : Yahoo Sport UK

Tags:    

Similar News