வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு திருமணம்.!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று விடுப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

Update: 2021-03-15 12:04 GMT

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று விடுப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே பும்ராவுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணம் நடைபெறுகிறது என்ற வதந்திகள் பரவியது. இந்த வதந்திகளுக்கு அனுபமாவின் தாயார் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினி சஞ்சனா கணேஷனை பும்ரா மணக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிது. இதனை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தும் விதமாக, தாங்கள் இருவரும் புதிய வாழ்க்கையில் இணைந்திருக்கோம் என குறிப்பிட்டிருந்தார். தற்போது அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News