வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனை நேரில் வாழ்த்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று மாரியப்பனை நேரில் வரவழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அப்போது மாரியப்பனுக்கு இமாசல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய தொப்பி அணிவித்து மகிழ்ந்தார். அது மட்டுமின்றி சால்வை மற்றும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார்.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில், சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதற்காக மாரியப்பனை வாழ்த்துகிறேன். தற்போது மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர். அவரது சாதனையால் நாடு பெருமை அடைகிறது.மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Central Minister Anurag Thakur Twiter