ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கியது சென்னை அணி.!
ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கியது சென்னை அணி.!
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணியின் வீரர்களை விடுவிக்க ஜனவரி 20ம் தேதி வரை கால அவகசம் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் இருந்து பல வீரர்களை விடுத்தனர். ஐபிஎல் 2020 தொடர் முடிவடைந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியுள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான முன்ஏற்பாடுகள் தொடங்கி உள்ளனர்.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்த வரையில் பெரிய மாற்றத்தை ரசிகர்கள் எதிர்பாத்தனர். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான தோல்விகளை கண்டது. இந்நிலையில் இந்த சீசனில் புதிய வீரர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்டுகின்றது. நேற்று நடைபெற்று ப்ளையர்ஸ் ரிலிஸிங்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு வீரர்களை விடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். அந்த வீரர்களில் ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்த நிலையில் அவரும் விடுக்கப்பட்டார். சென்னை அணி ரசிகர்கள் எதிர்பாத்த கேதர் ஜாதவ், பிவுஸ் சாவ்லா, முரளி விஜய், முனு சிங், ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்கள் வெளியிட பாட்டனர்.
இந்நிலையில் இந்த ஏலத்தில் சென்னை அணி ஒரு வெளிநாட்டு வீரரையும் ஐந்து இந்திய வீரரையும் ஏலத்தில் எடுக்க வைப்பு உள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ராபின் உத்தப்பாவை டிரெடிங் முறையில் மூன்று கோடிக்குக்கு வாங்கி உள்ளது. இந்த அறிவிப்பை நேற்று இரவு சென்னை அணி அறிவித்த நிலையில் ரசிகர்கள் இடையே கலைவையான விமர்சனங்கள் ஏழுந்துள்ளனர். ஓய்வு பெற இருக்கும் உத்தப்பாவை சென்னை அணி ஏன் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் காட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர்.