ஷேன் வாட்சன் இடத்தை நிரப்ப மற்றொரு ஆஸ்திரேலியா வீரரை தேடும் சென்னை அணி.!

ஷேன் வாட்சன் இடத்தை நிரப்ப மற்றொரு ஆஸ்திரேலியா வீரரை தேடும் சென்னை அணி.!

Update: 2021-01-30 16:04 GMT

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் கேதார் ஜாதவ், முரளி விஜய், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ஆரோன் பிஞ்ச், லசித் மலிங்கா, மேக்ஸ்வெல்,  என எதிர்பாராத முக்கிய வீரர்கள் பலர் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால் எந்த அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்திருக்கிறது.இந்நிலையில், மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேதர் ஜாதவ், முரளிவிஜய், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை மட்டும் நீக்கப்பட்டு மற்ற அனைத்து வீர்ரகளையும் தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை அணி வாங்கி இருக்கிறது.

இதில் அதிரடி பேட்ஸ்மேனான ஷேன் வாட்சன் தற்போது ஓய்வு பெற்று விட்டதால் சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி தற்பொழுது தொடக்க வீரர் ஷேன் வாட்சன் வெளியேற்றிவிட்டதால் வருகிற ஏலத்தில் தொடக்க வீரர் நோக்கியே அவர்களது கவனம் இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

எனவே வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்சை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரோன் பின்ச் அனுபவ வீரர் என்பதாலும் அவர் சிறந்த தொடக்க வீரர் என்பதாலும் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.

Similar News