செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் இந்திய அணிகள் எந்த அணியை எதிர்கொள்கிறது தெரியுமா!

Update: 2022-07-29 11:10 GMT

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் பகுதியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான தொடக்க விழா நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்குள் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதன்படி இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது. இந்திய ஆடவர் அணியின் 'ஏ' பிரிவு அணி ஜிம்பாப்வேவை இன்று எதிர்கொள்கிறது.

மேலும், இந்திய ஏ அணியில் செஸ் வீரர்கள் ஹரிகிருஷ்ணன், நாராயணன், விதித் குஜராத்தி, சசி கிரண், அர்ஜூன் எர்கியாசி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா 'பி' அணி துக்கிய அரசு எமிரேட்ஸை எதிர்த்து விளையாட உள்ளது. நிஹால் சரின், குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ரவுனாக் சத்வானி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா சி அணி தெற்கு சூடானை எதிர்கொள்கிறது. சூர்யா சேகர் கங்குலி, சேதுராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி, அபிமன்யு புரணிக் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில், இந்தியா ஏ அணி தஜிகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா பி அணி வேல்ஸை எதிர்கொள்கிறது. இந்தியா சி அணி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News