இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Update: 2021-01-19 16:59 GMT

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி, கூகுள் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை, மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என அவர் பதிவிட்டுள்ளார்.

கேப்டன் கோலி இல்லாத நேரத்திலும் நேர்த்தியாக விளையாடி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு ஒட்டு மொத்த இந்திய மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News