சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றோரு மோசமான தோல்வி.!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றோரு மோசமான தோல்வி.!
ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களம் இறங்கிய சென்னை அணியில் பாப் டுப் ப்ளஸிஸ் 10 ரன்னில் வெளியேற வாட்சன் அடுத்து வந்த வேகத்தில் 8 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
தொடக்க வீரராக களம் இறங்கிய சாம் க்ர்ரன் 22 ரன்னில் அவுட் ஆக சென்னை அணி தடுமாறியது. அதை தொடரந்து களம் இறங்கிய ராய்டு 13 ரன்னில் அவுட் ஆக சென்னை அணியின் டாட் ஆடர் சரிந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜடேஜா இருவரும் நிலையான ஆட்டத்தை கொடுத்தாலும் ரன்கள் பெரிய அளவில் சேர்க்கவில்லை. தோனியும் 28 ரன்னில் வெளியேற சென்னை அணி மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. அதை தொடர்ந்து சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 125/5 என்ற நிலைக்கு சென்றது.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேற மற்றொரு தொடக்க வீரர் உத்தப்பா 4 ரன்னில் அவுட் ஆக தொடர் விக்கெட்களை இழந்து ராஜஸ்தான் தடுமாறிய நிலையில் பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் ஸ்மித் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணிக்கு நெருக்கடியை கொடுக்க சென்னை அணியால் எதுவும் செய்ய முடியவில்லை.