இரண்டு சூப்பர் ஓவரை வரை சென்று மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பஞ்சாப் அணி.!

இரண்டு சூப்பர் ஓவரை வரை சென்று மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பஞ்சாப் அணி.!

Update: 2020-10-19 10:44 GMT

ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர்.

ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட் ஆக டி காக் மட்டும் நிலைத்து விளையாடி 53 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் வந்த க்ருனால் பாண்டியா 34 ரன்கள் அடிக்க பின்னர் வந்த பெல்லார் மற்றும் குல்டர் நைல் இருவரும் கடைசி ஓவர்கள் அடித்து விளையாட மும்பை அணி 176/6 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல். ராகுல் நிலைத்து விளையாடி 77 ரன்கள் குவித்தார். பின்னர் கெய்ல் மற்றும் பூரன் இருவரும் தலா 24 ரன்கள் சேர்க்க முதல் போட்டி போன்று இந்த போட்டியும் டிராவில் முடிந்தது.

அதை தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கே.எல். ராகுல் மற்றும் பூரன் இருவரும் 5 ரன்கள் மட்டும் அடித்து. மும்பை அணி எளிதில் வென்று விடும் என நினைந்த நிலையில் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் 5 ரன்கள் மட்டும் அடித்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது இந்த போட்டி. இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணி 11 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் களம் இறங்கிய கெய்ல் மற்றும் மயாங்க் அகர்வால் 4 பந்துகளில் வெற்றி பெற்று அசத்தியது.

Similar News