ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் அணி .!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் அணி .!

Update: 2020-10-23 09:41 GMT

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் உத்தப்பா 19 ரன்னில் வெளியேற பென் ஸ்டோக்ஸ் 30 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய சாம்சன் 36 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த பட்லர் 9 ரன்னில் அவுட் ஆகினார்.

இதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஸ்மித் 19 ரன்னிலும் ரியன் பாரக் 20 ரன்னிலும் அவுட் ஆக கடைசி ஓவரில் ஆர்ச்சர் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 154 ரன்கள் மட்டுமே அடித்தது. ஐத்ராபாத் அணியில் ஹோல்டர் மூன்று விக்கெட்களை வீழ்த்தகனார். பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியில் தொடக்க.வீரர்கள் கேப்டன் வார்னர் மற்றும் பேஸ்ரோ இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினர். கேப்டன் வார்னர் 4 ரன்னிலும் பேஸ்ரோ 10 ரன்னிலும் அவுட் ஆக அடுத்து ஜோடி சேர்ந்த மனிஷ் பான்டே மற்றும் விஜய் சங்கர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

இந்த ஜோடி விக்கெட்களை இழக்காமல் ஐத்ராபாத் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. இந்த ஜோடி 140 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மனிஷ் பான்டே 83 ரன்கள் சேர்த்தார். அவரை தொடர்ந்து விஜய் சங்கர் அரைசதம் வீளாசினார். இதனால் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Similar News