ஹோல்டரை பாராட்டி தள்ளிய டேவிட் வார்னர் - வெற்றி குறித்து வார்னரின் பதில்.!

ஹோல்டரை பாராட்டி தள்ளிய டேவிட் வார்னர் - வெற்றி குறித்து வார்னரின் பதில்.!

Update: 2020-10-23 15:40 GMT

ஐபிஎல் தொடரின் 40 வது லீக் போட்டியில் ஐத்ராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காத நிலையில் சஞ்சு சாம்சன் 36 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் மட்டும் அடித்தது.

பின்னர் விளையடியா ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் பின்னர் வந்த மனிஷ் பான்டே மற்றும் விஜய் சங்கர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதனால் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை தவரவிட கூடாது என இரு அணிகளும் திவிரமாக இருந்தன. ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் வாயப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : ஜேசன் ஹோல்டர் அணியில் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏனெனில் அனுபவம் வாய்ந்த வீரரான அவர் எங்களது அணியின் பவுலிங் யூனிட்டில் சேர்ந்தது பவுலிங்கை பலப்படுத்த உள்ளது.

அதுமட்டுமின்றி அவரால் சிறப்பாக பேட்டிங் செய்யவும் முடியும். அவர் ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜ் அவர் எங்கள் அணியில் இணைந்தது மிகப் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. மேலும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்று ஜேசன் ஹோல்டரை வார்னர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News