சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஸ்மார்ட் மற்றும் க்ளாஸாக விளையாடினர் அதுவே தோல்விக்கு காரணம் - ஸ்மித்.!

சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஸ்மார்ட் மற்றும் க்ளாஸாக விளையாடினர் அதுவே தோல்விக்கு காரணம் - ஸ்மித்.!

Update: 2020-10-23 15:43 GMT

ஐபிஎல் தொடரின் நேற்றய போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த 40 வது லீக் போட்டியில் ஐத்ராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காத நிலையில் சஞ்சு சாம்சன் 36 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் மட்டும் அடித்தது. பின்னர் விளையடியா ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் பின்னர் வந்த மனிஷ் பான்டே மற்றும் விஜய் சங்கர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதனால் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி எளிதில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது : போட்டியை நாங்கள் தொடங்கிய விதம் சிறப்பாகவே இருந்தது. ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அதே மூமென்ட்டத்தை எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை. விஜய் சங்கர் ஸ்மார்ட்டான இன்னிங்ஸ் விளையாடினார். மணிஷ் பாண்டே ஆட்டத்தை எங்கேயோ கொண்டு சென்றார். துக்கத்திலேயே இன்னும் ஒரு ஓவரை ஆர்ச்சருக்கு அதிகமாக கொடுத்திருக்கலாம் அது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அப்படி அவர் வீசி இருக்கும் பொழுது இன்னும் ஒரு விக்கெட்டை நாங்கள் பெற்று ஆட்டத்தில் ஒரு மாற்றம் இருந்திருக்கும். இதுகுறித்து நான் மற்ற பந்துவீச்சாளரிடம் ஆலோசனை செய்தேன். மொத்தத்தில் இந்த போட்டி சன் ரைஸர்ஸ் அணியின் வழியிலேயே சென்றது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து நின்று வந்ததால் அவர்கள் அதனை கணித்து ரன்களை சேர்த்து விட்டனர்.

Similar News