மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு தோனி கூறிய கருத்து.!

மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு தோனி கூறிய கருத்து.!

Update: 2020-10-24 19:39 GMT

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஷாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி மும்பை இன்டியன்ஸ் அணியிடம் மோசமான ஆட்டத்தால் தோற்றது. இந்த தோல்வியால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாகியுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் கூட கடினம் என்றாலும் வரும் போட்டிகளில் மற்ற அணிகளின் செயல்பட்டை பொருத்து வாய்ப்பு இருந்த நிலையில் அதையும் தவரவிட்டது சென்னை அணி.

இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பந்து வீச்சை தான் விரும்பிய நிலையில் டாஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருந்ததால் மும்பை அணி பந்தூ வீச்சை தேர்வு செய்து சரியான முறையில் பந்து வீசியதால் சென்னை அணி மிகவும் தடுமாறியது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்த வருடம் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. 1 – 2 போட்டிகளில் மட்டுமே நாங்கள் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகியவற்றை சிறப்பாக செய்தோம். ஒரு போட்டியில் 10 விக்கெட் அல்லது 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம். வீரர்கள் அனைவரும் இதனால் மனதளவில் மிகவும் காயம் அடைவார்கள். ஆனால் அனைவரும் தங்களது பெஸ்ட் கொடுத்துள்ளனர்.

எப்போதும் வெற்றி நம் வழியில் வராது அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என நம்புவோம். போட்டியில் எப்போதும் சிறிது அதிர்ஷ்டம் நம் வழியில் தேவை. ஆனால் இந்த டோர்னமெண்ட் இல் எதுவுமே நம் பக்கம் இல்லை. இந்த போட்டியில் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்து வீச தீர்மானம் செய்து இருப்பேன். ஏனெனில் மைதானத்தில் பனிப்பொழிவு இருந்த காரணத்தினால் இரண்டாவது பேட்டிங் செய்வது சாதகமாக அமைந்திருக்கும். இறுதியில் நாம் நினைத்தபடி எந்த ஒரு விடயமும் நம் வழியில் செல்லவில்லை.

Similar News