வருண் சக்கரவர்த்தியிடம் வீழ்ந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!
வருண் சக்கரவர்த்தியிடம் வீழ்ந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுக்மன் கில் 9 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ராகுல் திரிபாதி 13 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க நித்திஸ் ராணா தொடக்க வீரராக களம் இறங்கிய நிலையில் தொடந்து அதிரடியாக விக்கெட்டை இழக்காமல் விளையாட மறுமுனையில் சுனில் நரைன் சிக்ஸர் மழை பொழிந்தார்.
இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த கொல்கத்தா அணி விறுவிறுவென ஸ்கோரை அதிகரித்தது. ராணா 81 ரன்னிலும் நரைன் 64 ரன்னிலும் அவுட் ஆகினர். இருப்பினும் கொல்கத்தா அணக 194 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவண் மற்றும் அஜிங்கா ரஹானே இருவரும் சொதப்ப டெல்லி அணிக்கு தொடக்கமே சருக்கியது. பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் 47 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையை கட்ட கொல்கத்தா அணிக்கு வெற்றி எளிதாகியது. பந்து வீச்சில் தமிழகத்தின் சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சு தான் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணம். ஐந்து வீக்கெட்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.