டெல்லி அணியை பந்தாடிய சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி.!

டெல்லி அணியை பந்தாடிய சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி.!

Update: 2020-10-28 08:55 GMT

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் விர்த்திமான் சாஹா இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுக்க சன் ரைசர்ஸ் அணி முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் வார்னர் 66 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

பின்னர் விர்த்திமான் சாஹா சிறப்பான ஆட்டத்தை தொடர சன்ரைசர்ஸ் அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாஹா 87 ரன்கள் குவித்தார். சாஹா இந்த ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய முதல் இன்னிங்ஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. பின்னர் களம் இறங்கிய மனிஷ் பான்டே 44 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் அணி 219 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவண் டக் அவுட் ஆக பின்னர் வந்த ஸ்டோனிஸ் 5 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ரஹானே 26 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த ஹெட்மயர் 16 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். டெல்லி அணியில் ரிஷப் பன்ட் மட்டும் 36 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற டெல்லி அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Similar News