பெங்களுரு வீழ்த்தி முதல் இடத்தை மீண்டும் உறுதி செய்தது மும்பை அணி.!
பெங்களுரு வீழ்த்தி முதல் இடத்தை மீண்டும் உறுதி செய்தது மும்பை அணி.!
ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய இரண்டு அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய பெங்களுரு அணியில் ஆரோன் பின்ச் பதிலாக பிளிப்ஸ் களம் இறங்கினார். பெங்களுரு அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.
பிளிப்ஸ் 33 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய டிவில்லியர்ஸ் 13 ரன்னில் என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க படிக்கல் மட்டும் நிலைத்து விளையாடி 74 ரன்கள் சேர்த்தார். பெங்களுரு அணியில் அதன் பின்னர் களம் இறங்கிய எந்த வீரரும் பெரிய ரன் ஸ்கோர்கள் எடுக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் டி காக் 18 ரன்னிலும் இஷன் கிஷன் 25 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த சூரியக்குமார் யாதவ் நிலைத்து விளையாடி மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார். பெங்களுரு அணகயை போன்றே மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் சூரியக்குமார் யாதவ் மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்தார். அடுத்து வந்த சவ்ரோ திவாரி 5 ரன்னிலும் க்ருனாள் பாண்டியா 10 ரன்னிலும் ஹர்டிக் பாண்டியா 17 ரன்னிலும் அவுட் ஆகினர். நிலைத்து விளையாடிய சூரிக்குமார் யாதவ் 79 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.