ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா? மருத்துவ பறிசோதனையின் முடிவை வெளியிட்டது பிசிசிஐ!

ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா? மருத்துவ பறிசோதனையின் முடிவை வெளியிட்டது பிசிசிஐ!

Update: 2020-10-29 17:11 GMT

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று வீதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இந்திய அணியின் விவரத்தை அண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பிசிசிஐ வெளியிட்டது. மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் நவம்பர் 27 ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்று அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பின்னர் தான் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மூன்று வீதமான தொடரின் வீரர்கள் பட்டியலிலும் இடம்பெறவில்லை. காரணம் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்பொழுது கூட மும்பை அணிக்காக விளையாட முடியாத நிலையில் உள்ளார். இந்நிலையில் தான் பிசிசிஐ அவரின் பெயரை சேர்க்க வில்லை என கூறப்படுகின்றது. அதற்கு முன்னர் பிசிசிஐ ரோஹித் சர்மாவிற்கு மருத்துவ பறிசோதனை நடத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் முழுமையாக காயம் குணமடையாத நிலையில் மீண்டும் உடற்பயிற்சி பயிற்சியைத் தொடங்கிய ரோகித் சர்மாவின் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியதால் தற்போது பிசிசிஐ அவரின் உடற் தகுதியை பரிசோதித்து உள்ளனர். அப்படி நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பிறகு பிசிசிஐயின் தரப்பில் கூறப்பட்ட தகவலில் ரோகித் சர்மாவிற்கு காயம் குணமைடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வு தேவை.

ஆஸ்திரேலியா செல்லும் வீரர்கள் அனைவரது உடற் பகுதியும் விரைவில் நாங்கள் சமர்ப்பிப்போம். இது வழக்கமான நடைமுறைதான். யாரெல்லாம் உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும் ரோஹித்தை பரிசோதித்ததில் மூன்று வாரங்கள் வரை நிச்சயம் அவருக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோகித் இணைவது குறித்து சந்தேகம்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News