பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்த ராஜஸ்தான் அணி.!
பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்த ராஜஸ்தான் அணி.!
ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் மந்திப் சிங் ஆர்ச்சர் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆக பின்னர் வந்த கிறிஸ் கெய்ல் கே.எல் ராகுல் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தார்.
அதன் பின்னர் நிலைத்து விளையாடிய கே.எல்.ராகுல் 44 ரன்னில் அவுட் ஆக நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். மறுமுனையில் கெய்ல் 8 சிக்ஸ்ர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ராபின் உத்தப்பா 30 ரன்கள் அடித்து அவுட் ஆக பின்னர் வந்த சாம்சன் நிலைத்து விளையாடினார். பென் ஸ்டோக்ஸ் அரைசதம் வீளாச மற்றொரு புறம் சாம்சன் அதிரடி காட்டினார். ஸ்டோக்ஸ் 50 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் நிலைத்து விளையாடினார். சாம்சன் 48 ரன்னில் அவுட் ஆகினார். பட்லர் கடைசியில் அதிரடி காட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி ருசித்தது.