ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட கெய்ல் கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த நிலையில் சர்ச்சை.!

ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட கெய்ல் கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த நிலையில் சர்ச்சை.!

Update: 2020-10-31 14:48 GMT

ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் மந்திப் சிங் ஆர்ச்சர் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆக பின்னர் வந்த கிறிஸ் கெய்ல் கே.எல் ராகுல் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய கே.எல்.ராகுல் 44 ரன்னில் அவுட் ஆக நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். மறுமுனையில் கெய்ல் 8 சிக்ஸ்ர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தார்.

இன்னும் ஒரு ரன் எடுத்தால் சதம் என்று இருந்ததால் எளிதில் அவர் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்ச்சரின் யார்க்கர் பந்தினை கணிக்க தவறி காலில் வாங்கி கிளீன் போல்டானார். ஒரு ரன் வித்தியாசத்தில் சதத்தை நழுவ விட்டதால் விரக்தி அடைந்த கெயில் தன்னுடைய பேட்டை மைதானத்தில் வீசி எறிந்தார்.

அவர் வீசிய பேட் யார் மீதும் படாமல் சற்று தூரம் தள்ளி விழுந்தது. மேக்ஸ்வெல் அதனை எடுத்துக் கொடுத்தார். சிறிது டென்ஷனான அவர் அடுத்த நொடியே அவரது நல்ல குணத்தை காட்டி அவருக்கு கைகொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் செயல் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Similar News