ஐபிஎல் தொடரில் இருந்த மற்றொரு ஐத்ராபாத் அணி வீரர் விலகல்.!

ஐபிஎல் தொடரில் இருந்த மற்றொரு ஐத்ராபாத் அணி வீரர் விலகல்.!

Update: 2020-11-01 13:56 GMT

ஐபிஎல் தொடரின் இறுதி வார லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 52 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஐத்ராபாத் அணி பகளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு நிலையில் மற்றொரு முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தற்பொதைய நிலையில் மும்பை இன்டியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணக மட்டுமே தொடரில் இருந்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, ஐத்ராபாத் , ராஜஸ்தான் , ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றனர். பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது என நினைத்த பெங்களுரு மற்றும் டெல்லி அணிகள் தற்பொழுது தொடர் தோல்வி காரணமாக பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

இந்நிலையில் ஐத்ராபாத் அணியில் முதல் போட்டியில் இருந்து வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் ஐத்ராபாத் அணியின் முதல் போட்டியில் மிட்செல் மார்ச் காயம் அடைந்தார். பின்னர் சில போட்டிகள் பிறகு புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகிய நிலையில் தற்பொழுது தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார். இது ஐத்ராபாத் அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Similar News