பிளே ஆப் சுற்று போட்டியில் களம் இறங்கும் ரோஹித் சர்மா.!

பிளே ஆப் சுற்று போட்டியில் களம் இறங்கும் ரோஹித் சர்மா.!

Update: 2020-11-01 15:23 GMT

ஐபிஎல் தொடரில் இறுதி வார லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் மும்பை இன்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது இடது கையில் காயம் அடைந்தார். அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரோஹித் சார்மாவிற்கு பதிலாக கிரன் பெல்லார்ட் மும்பை அணிக்கு கேப்டன் பொருப்பை ஏற்று வருகிறார்.

மும்பை அணியில் பேட்மேன்களுக்கு பஞ்சம் இல்லாததால் ரோஹித் சர்மாவின் இடத்தை எளிதில் நிரப்பிவிட்டனர். இந்நிலையில் நேற்றய போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த கேப்டன் கிரன் பெல்லார்ட் கூறியதாவது : ரோகித் சர்மா காயத்தில் இருந்து கிட்டத்தட்ட மீண்டு விட்டார் என்றும் விரைவில் அவர் மும்பை அணியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது அவர் லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

மும்பை அணிக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. அதன்பிறகு பிளேஆப் சுற்றில் விளையாட உள்ளது. எனவே தற்போது மும்பை நல்ல நிலையில் இருப்பதால் நிச்சயம் பிளேஆப் சுற்றில் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது.

Similar News