சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு கே.எல் ராகுலின் விளக்கம்.!
சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு கே.எல் ராகுலின் விளக்கம்.!
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. அதன் படி முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 153 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய சென்னை அணியில் பாப் டுப் ப்ளஸிஸ் மற்றும் ரூத்ராஜின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : இந்த தோல்விக்கு ஒரு சிம்பிளான காரணம் தான். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இது போன்ற மிக முக்கியமான போட்டியில் 180 முதல் 190 வரை ரன்களை குவிக்க நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்களால் சரியான நேரத்தில் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.
இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் எங்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றமாக அமைந்தது முதல்பாதியில் நாங்கள் நினைத்த ரிசல்ட் எங்களுக்கு கிடைக்கவில்லை இருப்பினும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். கடைசி இரண்டு போட்டிகளில் எங்களுக்கு பிளேஆப்பிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் எங்களால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் எங்கள் அணியை நினைத்து பெருமை அடைகிறேன். அடுத்த ஆண்டு பலமான அணியாக திரும்புவோம் .