மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணியை வீட்டு அனுப்பிய சன்ரைசர்ஸ் அணி.!

மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணியை வீட்டு அனுப்பிய சன்ரைசர்ஸ் அணி.!

Update: 2020-11-04 09:26 GMT

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ஐத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் அணியை பொருத்தவரையில் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் செல்ல முடியும் என்பதால் இந்த போட்டியை வெற்றே தீர வேண்டும் என களம் இறங்கியது. அதே போல் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய மும்பை அணியை திணர செய்தது ஐத்ராபாத் அணி. சந்திப் சர்மா ஹோல்டர் போன்ற வீரர்கள் சிறப்பான பந்து வீச்சின் மூலம் மும்பை அணியை தடுமாற செய்ய 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. மும்பை இன்டியன்ஸ் அணியில் அதிகபட்சமாக பெல்லார்ட் 41 மற்றும் சூரியக்குமார் 36 ரன்கள் அடிக்க 149 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் விர்த்திமான் சாஹா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி மும்பை அணியை திணறடிக்க செய்தனர். வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க மும்பை அணி சிதறியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் வீளாச முதல் விக்கெட் வீழ்த்தவே திணறியது மும்பை அணி. விக்கெட் இழப்பின்றி ஐத்ராபாத் அணி வெற்றியை தனதாக்கியது. இதன் காரணமாக கொல்கத்தா அணி பிளே ஆப்ஸ் செல்லமுடியதா நிலை ஏற்பட்டது.

Similar News