இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் தொடர்! அகமதாபாத் மெஹ்ராத் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி.!
இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் தொடர்! அகமதாபாத் மெஹ்ராத் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி.!
கொரோனா தொற்றிற்கு பிறகு முதன் முறையாக இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அட்டவனையை இந்திய கிரிக்கெட் கட்டுபாடு வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வரும் 17 ம் தேதி முதல் தொடங்கி விளையாட உள்ளது இந்த டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி மாதம் முழுவதும் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி நாடு திரும்பிய உடனே இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான அட்டவனை படி முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ம் தேதி சென்னை சேப்பாகத்தில் தொடங்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் சென்னையிலும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டி அகமாதபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது. ஐந்து டி-20 போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என கூறப்படுகின்றது. கடைசி தொடரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் புனேவில் நடைபெற உள்ளது.