சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்: என்ன நடந்தது?

Update: 2022-04-16 02:16 GMT
சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்: என்ன நடந்தது?

15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி வீரர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சென்னை அணியின் மிகவும் நம்பிக்கை அளிக்கும் நட்சத்திர பந்து வீச்சாளரான தீபக் சாஹர், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது காயமடைந்தார். இதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தீபக் சாஹர் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

இதன் பின்னர் மீண்டும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக முதுகிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மீண்டும் 4 மாதங்களுக்கு விளையாட முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் சென்னை அணிக்கு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரப்பூர்வமாக அவர் விலகியுள்ளார். இத்தகவலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News