இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான தருணம்.. தோனியின் முடிவு என்ன?

இது தான் நான் ஓய்வை அறிவிக்க சரியான தருணம் என்று கூறுகிறார் தல தோனி.

Update: 2023-05-31 04:51 GMT

ஐபிஎல் கோப்பையில் ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து பல்வேறு தரப்பினர் தங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் வெற்றி பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே உடன் CSK அணியின் கேப்டன் உரையாடினார். அப்போது ஹர்ஷா போக்லே கடந்த முறை நான் உங்களிடம் ஓய்வு குறித்து கேட்டபோது நீங்கள் வெளிப்படையாக பதில் சொன்னீர்கள். இப்போது என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி நான் ஓய்வு முடிவை அறிவிக்க இது சிறந்த தருணமாகவும் நேரமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.


என் மீது அன்பும் பாசமும்  வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறிவிட்டு ஓய்வு பெறுவது எனக்கு எளிதாக இருக்கும். ஒன்பது மாதம் கடுமையாக உழைத்து விட்டு மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது கடினம் தான். ஆனால் என் உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். CSK ரசிகர்களிடமிருந்து நான் பெரும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.


அவர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது நிச்சயம் சிறந்த பரிசாக ரசிகர்களுக்கு இருக்கும். எனக்காக அவர்கள் காட்டும் அன்பு, உணர்ச்சி அனைத்தும் அவர்களுக்காக நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி பகுதி. எத்தனை ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News