இந்திய அணியில் இவரின் விக்கெட் வீழ்த்துவது எனது இலக்கு என கம்மிங்ஸ் சாவல்.!

இந்திய அணியில் இவரின் விக்கெட் வீழ்த்துவது எனது இலக்கு என கம்மிங்ஸ் சாவல்.!

Update: 2020-11-22 10:47 GMT


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. 


இந்நிலையில் டி -20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கோலி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி மட்டும் தான் வீராட் கோலி விளையாடுவார். மற்ற போட்டிகளுக்கு ரோஹித் சர்மா அணியில் இணைவார் என கூறப்பட்டுள்ள நிலையில்.

ஐனவரி மாதம் வீராட் கோலிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் நாடு திரும்புகிறார். அதன் பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடினால் தான் தொடரை வெல்ல முடியும். ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே கடந்த முறை சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. எனவே இந்த முறை தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மிங்க்ஸ் பேட்டியளித்துள்ளார். 


இதுகுறித்து அவர் கூறுகையில்… ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். அவர்களை விட மிகச்சிறந்த வீரர் விராட் கோலி.

ஒவ்வொரு அணியில் இருக்கும் மிகச் சிறந்த வீரர்களை விக்கெட் எடுப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. அவரது விக்கெட்டை வீழ்த்துவது மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறலாம். அவரது விக்கெட்டை தான் எனக்கும் வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பேட் கம்மின்ஸ். இவர் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது.

Similar News