உலக டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது இடம் வகித்த 26 வயதுடைய ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் முதன் முறையாக முதல் இடத்தை பிடித்தார். அதாவது கடந்த வாரம் நடைபெற்ற மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் வாயிலாக மெட்விடேவ் (8,615 புள்ளிகள்) பெற்றார்.
மேலும், முதல் இடத்தில் இருந்த நோவக் ஜோகாவிச் 8,465 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு உலக டூர் இறுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற மெட்விடேவ் அதற்கு அடுத்த ஆண்டிலும் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
மேலும், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Maalaimalar