டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் தொடர்வார்!

அமீரகத்தில் தொடர உள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் தொடர்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Update: 2021-09-17 08:56 GMT

இந்தியாவில் 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மீதம் உள்ள போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெறுகிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள 30வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை சி.எஸ்.கே. அணிகள் மோத உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவருக்கு காயமடைந்த நிலையில் ரிஷப் பன்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

இதன்பின்னர் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருந்தது. தற்போது 6 போட்டிகளில் வெற்றிப்பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் டெல்லி அணி உள்ளது. இதனிடையே டெல்லி அணி இன்னும் 6 லீக் போட்டிகள் பாக்கியுள்ள நிலையில், அந்த அணி இன்னும் 2 போட்டிகளில் வெற்றிப் பெற்றால் 'பிளே ஆஃப்' சுற்றுக்கு எளிதாக சென்றுவிடும்.

இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நலம் தேறிய நிலையில் அணிக்கு திரும்பியதால் கேப்டன் பதவி யாருக்கு அளிப்பது என்ற குழப்பம் நீடித்தது. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியப் ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பன்ட் கேப்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: 

Tags:    

Similar News