விவசாயத்தில் அசத்தும் தோனி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்.!
விவசாயத்தில் அசத்தும் தோனி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்.!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தனது பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஓய்வு பெற்ற பின்னர் தனது பண்ணையில் பிசியாக இருக்கிறார் தோனி. அவருக்கு 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலம் உள்ளது. அதில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதே போன்று பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் இயற்கை முறை குறித்து விளக்கி வருகிறார்.
தோனி தனது தோட்டத்தில் பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவைகளை இயற்கை முறையில் விளைந்து அதனை ஏற்றுமதியும் செய்துள்ளார். இதனிடையே டிராக்டர் ஒன்றை வாங்கி தோனி அதனை வயல் வெளியில் ஓட்டினார். அந்த வீடியோவும் வைரலாகியது. மேலும், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து பற்றியும், இயற்கை விவசாயத்தின் நன்மை பற்றியும் தோனி எடுத்துரைத்து வருகிறார். தோனி விளக்கியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தோனி தனது பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களுடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அந்தப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் வயல் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கிரிக்கெட்டிலிருந்து விடுபட்டு முழு நேர விவசாயம் செய்யப்படலாம் எனற செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.