ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு தோனி தான் காரணம் ஷர்துல் தாகூர் ஓபன் டாக்.!
ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு தோனி தான் காரணம் ஷர்துல் தாகூர் ஓபன் டாக்.!
ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்த தொடர் குறித்து கணித்திருந்த முன்னாள் வீரர்களின் பலர், , டி.20 மற்றும் ஒருநாள் தொடரின் முடிவு என்னாவாக இருந்தாலும், டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும், சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் வீழ்த்தவே முடியாது என்றே தெரிவித்திருந்தனர்.
முன்னாள் வீரர்களின் கணிப்புக்கு ஏற்றுவாறு முதல் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது, மேலும் விராட் கோலியும் முதல் போட்டியுடன் நாடு திரும்பினார். இதனால் ரசிகர்களும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இனி ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாதே என்றே புலம்பி வந்தனர்.ஆனால் இரண்டாவது போட்டியில் கேப்டன் பதவியை ஏற்ற ரஹானே, இரண்டாவது போட்டியிலேயே இந்திய அணிக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்று கொடுத்தார். அனுபவ வீரர்கள் பலர் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து கொண்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்ததாக நடைபெற்ற மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. வெற்றிபெற வாய்ப்பே இல்லை என கருதப்பட்ட நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கடுமையாக போராடி வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் அணியின் இந்த அசாத்திய வெற்றிக்கு, இளம் வீரர்களின் போராட்ட குணமே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடராஜன், ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் போராட்டமே இந்திய அணிக்கு இந்த வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்தது.