ஐசிசி அவார்ஸ் டி-20 சிறந்த கேப்டனாக தோனி தேர்வு!
ஐசிசி அவார்ஸ் டி-20 சிறந்த கேப்டனாக தோனி தேர்வு!
ஐசிசி கிரிக்கெட் வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 2011-2020 ஆகிய 10 ஆண்டுகள் வரையிலான சிறந்த வீரர்களுக்கு விருதுகளுக்கான பட்டியலை அறிவித்தது. அந்த பட்டியலின் அடிப்படையில் அனைத்து சர்வதேச அணிகளில் இருந்து தகுதியான வீரர்களை தேர்ந்தேடுக்க வீரர்களின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி.
அந்த வகையில் சிறந்த டி-20 அணி மற்றும் சிறந்த ஒடி ஐ அணி மற்றும் சிறந்த டெஸ்ட் அணி என பல்வேறு வகையில் தற்போழுது விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசியின் இந்த பட்டியலில் சிறந்த டிகேட் வீரர் யார் என்ற போட்டி தான் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐசிசி நேற்று சிறந்த டி-20 அணியை அறிவித்து அந்த அணியில் அனைத்து சர்வதேச வீரர்களில் சிறந்த வீரர்களை கொண்டு ஒரு XI ஐ அறிவித்தது. அந்த அணியில் கேப்டனாக இந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி-20 அணியில் இந்திய அணியின் சார்பில் வீராட் கோலி , ரோஹித் சர்மா மற்றும பும்ரா ஆகிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் பின்ச் மற்றும் மெக்ஸ்வெல் இருவரும் இடம் பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டிஸ் அணியில் கெய்ல் மற்றும் பெல்லார்ட் இடம்பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் இடம் பிடித்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் இடம் பிடித்துள்ளார். இலங்கை அணியின் மலிங்கா இடம் பிடித்துள்ளார்.