அணியை தக்கவைப்பதில் தான் தோனி ஸ்போஷாலிஸ்ட் கவுதம் கம்பீர் கருத்து!

அணியை தக்கவைப்பதில் தான் தோனி ஸ்போஷாலிஸ்ட் கவுதம் கம்பீர் கருத்து!

Update: 2021-01-25 14:58 GMT

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த சீசனில் சி.எஸ்.கே முதல் ஆளாக வெளியேறியது.

ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதால், வரும் சீசனில் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும்; முற்றிலும் புதுவிதமான அணி உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பியூஸ் சாவ்லா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் ஆகியோரை மட்டும் விடுவித்து, டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, ஃபாப் டு ப்ளெஸ்ஸி, அம்பதி ராயுடு போன்ற சீனியர் வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது. அதோடு, ராஜஸ்தானிடம் இருந்து ட்ரேட் முறையில் ராபின் உத்தப்பாவை வாங்கிக் கொண்டது.​​இது குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர்:“இது சரியான ஸ்ட்ரேட்டஜி. அணி புதுப்பிக்கப்படும் என்பதற்கு, ஒட்டுமொத்தமாக அணியை மாற்றுவது என்று அர்த்தம் அல்ல. கடந்த சீசன், சி.எஸ்.கே.வுக்கு அப்படியொன்றும் மோசமான சீசனாக இருக்கவில்லை. ஏனெனில், அவர்கள் ஒவ்வொரு முறையும் ப்ளே ஆஃப் முன்னேறியதால், அவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ப்ளே ஆஃப் முன்னேறவில்லை என்பதால், அணியைப் புதுப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்”

“இதுதான் தோனியின் ஸ்பெஷாலிட்டி. தோனி எப்போதுமே அந்தக் குறிப்பிட்ட சீசனை மட்டும்தான் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப அணியை கட்டமைப்பார். இதுதான் சி.எஸ்.கே–வுக்கும், ஆர்.சி.பி–க்கும் உள்ள வித்தியாசம். மக்கள் இது சி.எஸ்.கேவுக்கு மோசமான சீசன் என்று சொன்னாலும், அவர்கள் ஐந்து வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளனர். ஆனால், ப்ளே ஆஃப் சென்றபோதும் ஆர்.சி.பி பத்து வீரர்களை விடுவித்துவிட்டது.”

“பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல, டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் அந்த மனநிலைதான், சி.எஸ்.கேவின் வெற்றிக்கு காரணம். ஆர்.சி.பி போல மொத்தமாக பத்து வீரர்களை விடுவிக்கும்போது, அது அணியில் இருக்கும் வீரர்களுக்கும் ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்கிவிடும்”

Similar News