டைமண்ட் லீக் இறுதி சுற்று ஈட்டி எறிதல் - இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம்!

டைமண்ட் லீக் இறுதிச்சுற்று ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

Update: 2022-09-11 00:29 GMT

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தற்போது டைமண்ட் லீக் இறுதி சுற்று ஈட்டியெறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். டைமண்ட் லீக் தடுக்கல போட்டியின் இறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிஜ் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான ஈட்டியெறிதல் இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட ஆண்டு ஆறு வீரர்கள் முந்தைய லீக் போட்டியில் பெற்று புள்ளிகள் அடிப்படையில் தொகுதி பெற்று பங்கேற்றனர்.


இந்த போட்டியின் முதல் வாய்ப்பில் பவுல் செய்து ஏமாற்றும் அளித்த நீரஜ் சோப்ரா. இரண்டாவது முயற்சியில் 88.84 மீட்டர் தூரம் இருந்து அசத்தியதுடன் முன்னிலை பெற்றார். அதன் பிறகு தனது அடுத்த நான்கு முயற்சியிலும் அதை விட கூடுதல் தூரம் வீசவில்லை. அதே நேரத்தில் மற்ற வீரர்களும் இரண்டாவது முறையில் நீரஜ் சோப்ரா பேசிய தூரத்தை விட அதிகம் வீச முடியவில்லை. ஹரியானவை சேர்ந்த 24 வயதான நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான செக் குடியரசு வீரர் ஜாகூவாட்ச் வில்லேஜ் வீரர் 86.94 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தையும், ஜெர்மனிய வீரர் 83.73 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நீரஜ் சோப்ராக்கு டைமண்ட் கோப்பையுடன் 24 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கான வைல்ட்கார்டு கொடுக்கப்பட்டது. கடந்த 13 மாதங்களில் அடுத்தடுத்த மூன்று புதிய சரித்திரங்களை படைத்து தனது திறமையை உலகுக்கு பறைசாற்று இருக்கிறார் நீரஜ்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News