ஐபிஎல் தொடரை நடத்திய யுஏஈ-க்கு பிசிசிஐ வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா.!

ஐபிஎல் தொடரை நடத்திய யுஏஈ-க்கு பிசிசிஐ வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா.!

Update: 2020-11-16 17:05 GMT


ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் திறமையான இளம் இந்திய வீரர்களை கண்டறிய இந்த ஐபிஎல் தொடர் உதவு வகையில் இந்த தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தால் தொடங்கபட்டு நடைபெற்று வருகின்றது. இதவரை 13 சீசன் நடைபெற்றுள்ளன. இந்த தொடர் பெறும்பாலும் இந்தியாவில் தான் நடத்தப்படும் ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. 


ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றதால் அதே போன்று இந்த தொடரையும் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டது. அதே போல் ஐக்கிய அரபு அமிரகமும் அனுமதி வழங்கியதால் ஐபிஎல் தொடர் அங்கு நடைபெறுவது உறுதியான நிலையில் இந்திய வீரர்கள் தங்குவதற்கு பயிற்சி மேற்கொள்ள மற்றும அனைத்து வசதிகளும் ஐக்கிய அரபு அமிரகத்திடம் கொரப்பட்டது. 


அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்த ஐக்கிய அரபு கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரையும் சிறப்பாக நடத்தி முடித்தது. எந்த கொரோனா தொற்று இன்றி எந்த சிக்கலும் இன்றி ஐபிஎல் தொடரை நடத்தி கொடுத்த ஐக்கிய அரபு அமிரகத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ 100 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. ஏற்கனவே செய்த ஓப்பந்தின் படி பிசிசிஐ ஐக்கிய அரபு அமிரகத்திற்கு செய்த ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

Similar News