டி20 உலகோப்பை அரையிறுதி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடக்க உள்ளது.;

Update: 2021-11-10 04:44 GMT
டி20 உலகோப்பை அரையிறுதி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடக்க உள்ளது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்2 பிரிவிலிருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அபுதாபியில் இன்று மாலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையை வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, மீண்டும் கோப்பையை கைப்பற்றுகின்ற வேகத்தில் உள்ளது. இதனிடையே நியூசிலாந்து அணியும் இந்த முறை கோப்பையை வென்றாக வேண்டிய சூழலில் தீவிரமான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. தற்போது ரசிகர்களும் ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: First Post


Tags:    

Similar News