இலங்கை அணியை 135 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து அணி.!
இலங்கை அணியை 135 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து அணி.!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் பின்னர் முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் திரிமானே 4 ரன்னில் அவுட் ஆகினார்.
அவரை தொடர்ந்து குசல் மென்டிஸ் டக்அவுட் ஆகி அவுட் ஆக அவரை தொடர்ந்து குசல் பெரேரா 20 ரன்னில் அவுட் ஆகினார். மெத்திவ்ஸ் மற்றும் சண்டிமல் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் மெத்திவ்ஸ் 27 ரன்னிலும் சண்டிமல் 28 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். சனாகா 23 ரன்கள் அடித்த நிலையில் மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர்.
இதை தொடர்ந்து அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 135 ரன்கள் மட்டும் அடித்தது. இங்கிலாந்து அணியில் டம்பெஸ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். ப்ராட் 3 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் கிரேஷி 9 ரன்னிலும் சிப்லி 4 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரூட் மற்றும் பேஸ்ரோ இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். 127-2 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.