பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யலாமா வேண்டாமா ? 48 மணி நேரம் கெடு விதித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி !

அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது முடிவினை 48 மணி நேரத்திற்குள் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவிக்க உள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-18 04:45 GMT

அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது முடிவினை 48 மணி நேரத்திற்குள் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவிக்க உள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களை காட்டி தொடரில் விளையாடாமல் கடைசி நேரத்தில் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டுமின்றி அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கும் கடும் ஏமாற்றமடைந்தனர். இது போன்ற சூழலில் பாகிஸ்தானில் உள்ள தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நிலவரம் பற்றி கலந்தாலோசனை நடத்தி வருவதாகவும், அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் குறித்து பின்னர் அறிவிப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இங்கிலாந்து அறிவிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணி விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News